Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out

Pages

Wednesday, May 9, 2012

வழக்கு எண்: 18/9 - விமர்சனம் அல்ல, அலசல்


படத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பாதி - ”இந்தப் படத்திற்கா
மக்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றார்கள்?” என்று நினைக்க வைக்கும் அளவுக்கு
சாதாரணம் - unimpressive first half. முதல் பாதியில் விட்டதற்கு சரிகட்டும்
விதமாக 2-ம் பாதி. ஏனெனில், படத்தின் கதை இடைவேளைக்குப் பின்
தான் ஆரம்பிக்கின்றது. கிளைமாக்ஸ் சூப்பர்.

Saturday, March 24, 2012

சைலன்ஸ் ப்ளீஸ்... - குறும்படம் திரைக்கதை




INT. PSYCHIATRIC WARD/HOSPITAL - DAY                                                 SCENE #1

கைகளில் மெடிக்கல் ரிப்போர்ட்டுடன் சில பேஷண்டுகள் நாற்காலிகளில் காத்திருக்கின்றனர். ‘டாக்டர் ரங்கபாஷ்யம், சைக்கியாட்ரிஸ்ட்’ என்ற எழுத்துக்கள் பித்தளையில் மின்னுகின்றன. டாக்டர் ‘IN’-ல் இருக்கின்றார். சுவரில் ‘ON APPOINTMENT ONLY,’ ‘SILENCE PLEASE’ என்ற அறிவிப்புகள். அந்த நடுத்தர வயது மனிதர் பரபரப்பாக, அமைதியின்றி உட்கார்ந்திருக்கின்றார். கதவின் முன் டேபிள் போட்டுச் சேரில் அமர்ந்திருக்கும் நர்ஸ் அவரைப் பார்த்து, ‘கொஞ்சம் பொறுமை’ என்று சைகை செய்கின்றாள். உள்ளே டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்த நோயாளி வெளியே வருகின்றார். கூடவே இன்னொருவரும் பின்தொடர்ந்து வருகின்றார்.

NURSE 
சார் நீங்க போங்க... 

அந்த நபர் அதற்கெல்லாம் அவசியமேயில்லாமல் அவசரமாக உள்ளே செல்கின்றார்.

Friday, March 23, 2012

கறுப்பு தினம் - குறும்படம் திரைக்கதை


FADE IN:

INT. MIDDLE CLASS HOUSE - MORNING                                                 SCENE #1

விடிந்து கொண்டிருக்கும் வானம். ‘கந்த சஷ்டி கவசம் கேட்கின்றது.

NARMADHA
(காய்கறி நறுக்கிக் கொண்டே)
அனு, எழுந்திரு... 
எழுந்திரு... ம்ம் சீக்கிரம்...

ANU
(புரண்டு கொண்டே)
ம்ம்ம்... மம்மி...

NARMADHA
என்னங்க, எழுந்திருங்க...

RAGAVAN
ம்ம்ம்...

பதில் சொல்லாது புரண்டு மேலும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றான்.

NARMADHA
எழுந்திருக்கறாங்களா பாரு... 
தெனம் இதே வேலை...

Friday, March 9, 2012

வாசற்கதவு


ல வருடங்களுக்கு முன் நாம் பிறந்த, வாழ்ந்த, விற்ற வீட்டை மறந்திருந்தாலும் யாருக்கும் வாசற்கதவு மறந்திருக்காது. நம் பழையவீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாசற்கதவு தான். வீட்டின் உள் அமைப்பு கூட மறந்துபோயிருக்கக் கூடும்.

பாதி திறந்த கதவு, பாதி மூடிய கதவு இரண்டுமே ஒன்றுதான். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்என்றும், ‘தட்டுங்கள் திறக்கப்படும் என்றும் சொல்வது கதவைப் பற்றி அல்ல

Friday, March 2, 2012

இன்று...

த்தனை வித்தியாசமான ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்திருப்பேனா என்ற கேள்விக்கு பதிலை என்னால் ஊகிக்கமுடியவில்லை. திபெத்தியர் என்று சொல்லலாம் போலிருந்தார். ஆனால் உறுதியாகச் சொல்லமுடியாது.


ஐந்தடிக்கும் குறைவான உயரம், இடுங்கிய கண்கள், தோலில் சுருக்கங்கள், ஏறக்குறைய உடம்பு முழுதும் மூடியிருந்தது - தீ விபத்தில் சிக்கிக்கொண்டு, தப்பிப் பிழைத்தவரோ... குரலில் பிசிறடித்த ஒரு ரீங்காரம் - சற்று கூர்ந்து கேட்டால் தான் புரியும். இத்தனைக்கும் மிகக்குறைவாகத் தான் பேசினார்(!). குரலிலிருந்து வயதைக் கணிக்க முடியவில்லை. உடலிலிருந்து ஒருவிதமான ரசாயன நெடி - ஏதாவது ஃபாக்டரியில் வேலை செய்பவராயிருக்கலாம்.

நிறைவு - சிறுகதை


பேருந்து நிலையமும், சுற்றியுள்ள இடங்களும் வியாபார, போக்குவரத்துச் சத்தங்களால் கலகலவென இருந்தாலும் வேலப்பன் அப்படியிருக்கவில்லை, காரணம் அவன் தொழில் அப்படியிருந்தது.

அன்றைக்கு என்று ஒரு கிராக்கிகூட வரவில்லை. இத்தனை பேர்களில் ஒருத்தனுக்குக் கூடவா செருப்பு அறுந்து போகவில்லை? அப்படியும் வரும் ஒன்றிரண்டு பேரும் பேருந்துநிலையத்துக்கு அருகிலுள்ள கண்ணுச்சாமியின் கடைக்குச் சென்றுவிடுகின்றனர். அது தன்னுடையதைவிடக் கொஞ்சம் ஷோக்காயிருக்கின்றதால் தான் எல்லாரும் அங்கு போகின்றனர்என்பது வேலப்பனின் எண்ணம்! அதோடு இவனுடையது சற்றுத்தள்ளி ஒதுக்குப்புறமாக இருக்கின்றது. ஆதிவாசிகள் நலத்திட்டத்தில் அரசாங்கம் பொட்டிக்கடைமாதிரி ஒன்றை அவனுக்கு அமைத்துத் தந்திருந்தது. அந்தச் சலுகை இவனுக்கு இல்லையென்று கூறி அவர்கள் சொன்ன காரணமும் இன்று வரை இவனுக்கு விளங்கவில்லை.

Monday, July 4, 2011

கறுப்பு தினம் - சிறுகதை


ராகவனுக்கு இருப்பே கொள்ளவில்லை நர்மதா - அவன் மனைவி - வீடு வந்து சேரவேண்டுமே என்றிருந்தது. மனசு முழுக்கக் கவலை வியாபித்திருந்தது.
ராகவனுக்கு இன்று அலுவலகம் விடுமுறை. அவள் வேலை செய்வதோ தனியார் நிறுவனத்தில் எனவே அவர்கள் வசதிப்படி தான் விடுமுறைகளும் இருக்கும். தினமும் ராகவன் தன் வண்டியில் அவளை ஆபிஸில் இறக்கிவிட்டுப் போவான். ஆனால் அவனுக்கு நேற்று மாலையிலிருந்தே ஜுரம் ஆரம்பித்திருந்தது.

காலையில் புறப்படும்போது கூட அவளிடம் கேட்டான், ’நானே கொண்டுவிடட்டுமா?’ என்று அவள் தான் உங்களுக்கு எதுக்கு வீண்அலைச்சல்...இன்னைக்கு ஒருநாள் தானே நானே போய்க்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க.. அதோட மறக்காம டாக்டர்கிட்ட போய்ட்டு வாங்க..ஏதாவது வேணும்னா பக்கத்துவீட்டம்மாகிட்ட கேளுங்க.. எப்படியும் குழந்தைங்க வர்றதுக்கு முன்னாடி வந்திடுவேன்..என்று சொல்லிவிட்டுச் சென்றவள் குழந்தைகள் வந்த பின்பும் காணவில்லை. ஆபிஸிற்கு போன் செய்தால் ரிங் போய்க்கொண்டேயிருந்தது. நெட்வொர்க் எல்லாம் ஜாம் என்று சொன்னார்கள். அடுத்த மாதம் முதலில் அவளுக்கு ஒரு மொபைல் ஃபோன்வாங்க நினைத்தான்.